கிளீன் சிறிலங்கா மூலம் மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்
கிளீன் சிறிலங்கா திட்டத்தின் மூலம் அரசு நிறுவனங்கள், தொழில்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க(Chathuranga Abeysinghe) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (22.01.2024) தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துக்களை தெரிவித்த பிரதி அமைச்சர்,
முக்கிய நெருக்கடி
“இலங்கையில் மீண்டும் உற்பத்தித்திறனுக்கான விருதை அறிமுகப்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.
தொழில்துறை பேட்டைகள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து அதிக உற்பத்தித்திறனைப் பெறுவதற்கு தேவையான திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும்.
வாழைச்சேனையில் உள்ள காகிதத் தொழிற்சாலையின் முக்கிய நெருக்கடி, பயன்படுத்தப்பட்ட காகிதத்தின் பற்றாக்குறையே.
மறுசுழற்சி செயல்முறைக்குத் தேவையான பயன்படுத்தப்பட்ட காகிதம் இன்று ஒரு மாஃபியாவாக மாறியுள்ளது.
மேலும், அரசு நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் வீடுகளால் நிராகரிக்கப்படும் காகிதங்களை இந்த தொழிற்சாலைக்கு வழங்கினால், தேவையான உற்பத்தியை அதிகபட்ச நிலைக்கு கொண்டு வர முடியும்’’ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
