சட்டவிரோத கடற்றொழிலாளர்களை கைது செய்ய உத்தரவு
யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தால் தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை பயன்படுத்தி அண்மைக்காலமாக யாழ் மாவட்ட கடற்பரப்புக்களில் கடற்றொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக மீன் வளம் குறைந்து இலங்கையின் கடல் வளம் அழிவடையும் பாதகமான நிலை உருவாகுவதால் சட்ட விரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
கடற்படை,இராணுவம்,விமானப்படை,பொலிஸார்,விசேட அதிரடிப்படையினர் மூலம் இவர்களை கைது செய்து நீதிமன்றில் நிறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் தத்தமது கடற்றொழிலாளர்களுக்கு தெரியப்படுத்துமாறு வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரியால் கடிதம் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
