மன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மன்னார் (Mannar) கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 4 இந்திய கடற்றொழிலாளர்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த உத்தரவானது இன்று (20) மன்னார் நீதவானினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று (20) தமிழ்நாடு- இராமேஸ்வரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த 4 கடற்றொழிலாளர்கள்1 படகுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விளக்கமறியல்
மன்னார் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் குற்றச்சாட்டில் வடமத்திய மாகாண கடற் படையினரின் கூட்டு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த 4 கடற்றொழிலாளர்களும் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படனர்.
இதன் போது, விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை(7-03-2025) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |