கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம்! பொலிஸாரால் தேடப்படும் செவ்வந்தியின் பாட்டி வெளியிட்ட தகவல்
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை விவகாரம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபரான செவ்வந்தி என்றப் பெண் கடந்த 3 மாதங்களாக வீட்டிற்கு வரவில்லை என்று அவரது பாட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகமொன்றிடம் குறிப்பிடும் போது,
செவ்வந்தி என்னுடைய மகளின் மகள். என்னுடைய பேர்த்தி. அவர் கடந்த மூன்று மாதங்களாக வீட்டிற்கு வரவில்லை.
வீட்டிற்கு வந்த பொலிஸார்
இந்தவீட்டில் நான், எனது மகள்(செவ்வந்தியுடைய அம்மா) மற்றும் அவரது மகன்(செவ்வந்தியுடைய தம்பி) ஆகியோர் வசித்து வருகின்றோம்.
நேற்றையதினம் எமது வீட்டிற்கு வந்த பொலிஸார் செவ்வந்தியுடைய தம்பியை வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதனையடுத்து வெளிவந்த செய்திகளின் ஊடாகவே சம்பவத்தை நான் அறிந்து கொண்டேன்.
மேலும், எனது பேத்தி கடந்த மூன்று மாதங்களாக வீட்டிற்கு வரவில்லை. போதைப்பொருள் வியாபாரம் மேற்கொண்டதற்காக அவர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
