ஹமாசுக்கு எதிராக கருத்து வெளியிட்ட இந்திய வைத்தியர் பணிநீக்கம்
இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், ஹமாஸுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்ட பஹ்ரைன் வாழ் இந்திய மருத்துவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த வைத்தியரான சுனில் ராவ், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பஹ்ரைனில் வேலை செய்துவரும் நிலையிலேயே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மத ரீதியான சர்ச்சை
சுனில் ராவ் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், ஹமாஸுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளதோடு, அவரது சில கருத்துக்கள் மத ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,பஹ்ரைனில் இருக்கும் ராயல் பைஹ்ரைன் வைத்தியசாலை நிர்வாகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிவிப்பில்,“எங்களது மருத்துவமனையில் சிறப்பு வைத்தியராக பணியாற்றும் சுனில் ராவ், சமூகத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிட்டிருப்பதாக அறிகிறோம்.
அவரின் கருத்துக்கள் முழுக்க முழுக்க தனிப்பட்டவை. அவரின் கருத்துக்களுக்கும், வைத்தியவாலைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
அதே சமயம், அது எங்களின் வைத்தியசாலை கோட்பாடுகளுக்கு எதிரானது. அவரை உடனடியாக வேலையில் இருந்து பணி நீக்கம் செய்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.