இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நாளை ஜனாதிபதியுடன் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாளை(8) சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று கொழும்பை வந்தடைந்தார்.
விசேட விமானத்தில் இன்று(8.9.2026) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை, பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
ஜனாதிபதியுடன் சந்திப்பு
எதிர்வரும் 10 திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தக் காலகட்டத்தில், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இலங்கையின் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார்.

பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார்.
நாமலின் எயார்பஸ் ஊழலில் தொடர்புப்பட்ட இருவரின் மர்ம மரணங்கள்! நான்கு மரணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய சர்ச்சை
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening