5000 கோடி ரூபாய் திருமண செலவை ஒரு வாரத்தில் ஈடு செய்த இந்திய கோடீஸ்வரர்
பணக்காரர்களாக இருப்பவர்கள் கூட திருமணம் நடந்ததன் பின்னர் பிச்சைக்காரர்களாக மாறும் செய்திகளை அதிகமாக அறிந்திருக்கிறோம்.
ஆனால் 5000 கோடி ரூபாய் திருமணச் செலவு ஒரு பொருட்டே அல்ல. என்பதை காட்டும் செய்தியாக இது அமைந்துள்ளது.
இந்தியாவின் முதல்தர பணக்காரரான முகேஸ் அம்பானி (Mukesh Ambani), தமது மகன் ஆனந்த் அம்பானிக்கு (Anant Ambani) கடந்த வாரம் திருமணம் செய்து வைத்த நிலையில், அதற்கான செலவிட்ட பணத்தைக் காட்டிலும், ஐந்து மடங்கான பணத்தை சம்பாதித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து மதிப்பு
இந்த தலைமுறையில் இளைய மகன் என்பதால் அம்பானி குடும்பம் ஆனந்தின் திருமணத்தை வெகு விமரிசையாகவே நடத்தியது.
இதற்காக 5000 கோடி ரூபாயை அம்பானி செலவிட்டிருந்தார். இது இலங்கையின் இன்றைய மதிப்பில் 10ஆயிரம் கோடி ரூபாயாகும்
இது அம்பானியின் மொத்த சொத்து விகிதத்தில் 0.5 சதவிகிதம் மாத்திரமேயாகும். இன்றைய நிலவரப்படி முகேஸ் அம்பானியின் சொத்து மதிப்பு 121.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 இலட்சம் கோடி ஆகும். இலங்கையின் மதிப்பில் 36 இலட்சம் கோடி ரூபாய்களாகும்.
அண்மையில் வெளியான தகவல்
இந்தநிலையில், அண்மையில் வெளியான தகவலின் அடிப்படையில் முகேஸ் அம்பானியின் சொத்து மதிப்பில் கடந்த இரண்டு வாரத்தில் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 2024 ஜூலை 5-ஆம் திகதியன்று முகேஸ் அம்பானியின் சொத்து மதிப்பு 118 பில்லியன் டொலர்களாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களில் அது 121 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.
இதன்படி அவர் கிட்டத்தட்ட 25,000 கோடி ரூபாயை இந்த காலத்துக்குள் சம்பாதித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
