நாட்டை விட்டு வெளியேற முயன்ற பாதுகாப்பு அதிகாரி: கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் முன்னாள் பனிப்பாளர் அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய இறைவரித் திணைக்களத்தின் விசாரணை தொடர்பில் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பயண தடை காரணமாக அசங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
அசங்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒசி அபேகுணசேகரவின் புதல்வர் ஆவார்.
சர்ச்சைக்குரிய கருத்து
இதேவேளை, இணைய ஊடகமொன்றுக்கு அசங்க வழங்கிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பிலும் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த பயணத்தடை விதிக்கப்பட்டது.
இந்த விசாரணை தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நேர்காணல் தற்பொழுது இணைய தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

முழுசா 10 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அதிஷ்டம் எந்த ராசிகளுக்கு? Manithan

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
