கேரளாவில் தனியான வெளியுறவுத்துறை செயலாளர் பதவி : எதிர்ப்பை வெளியிட்ட பாரதிய ஜனதா
இந்திய தென்னிந்திய மாநிலமான கேரளா மாநிலத்தின் அரசு, வெளியுறவுத் துறை செயலாளராக கே.வாசுகி (K Vasuki) என்பவரை நியனம் செய்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா (Kerala) அரசின் தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை செயலாளரான கே.வாசுகி, வெளியுறவுத் துறை விவகாரங்களையும் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவித்து அந்த மாநில அரசு வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சகம்
இந்தநிலையில், வெளியுறவுத் துறை விவகாரங்கள் என்பது மத்திய அரசுக்கு உரியது எனவே ஒரு மாநில அரசால் எப்படி இந்த துறைக்கு ஒரு செயலாளரை நியமிக்க முடியும்? கேரளா அரசு ஒன்றும் தனி நாடு அல்ல என பாரதிய ஜனதாக்கட்சி (BJP) கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
எனினும்,டெல்லியில் உள்ள மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதகரங்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்வதற்காகவே வாசுகி அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக கேரள அரசாங்கம் பதிலளித்துள்ளது.
இந்தநிலையில் குறித்த பதவி தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |