எரிபொருள் கொள்வனவுக்கு இந்திய வங்கிகள் கடனுதவி
இலங்கையின் எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் இந்திய வங்கிகளின் கடனுதவியைப் பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் இந்திய ஏற்றுமதி-இறக்குமதி அபிவிருத்தி வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறுகிய கால கடனாகப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
அதற்கு மேலதிகமாக இந்திய அரச வங்கியொன்றிடமிருந்து மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாகப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

இவ்வாறு பெற்றுக் கொள்ளப்படும் கடன் தொகையைக் கொண்டு எரிபொருள் கையிருப்பை
அதிகப்படுத்துவதன் மூலம் பற்றாக்குறைக்குத் தீர்வு காண முடியும் என்று அரசாங்கம்
எதிர்பார்த்துள்ளது.
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri