லண்டனில் பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்தை தாக்கிய இந்தியர் கைது
லண்டனில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய மேலும் ஒரு நபரை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கலவரத்தின் போது, தாக்குதலின் போது தூதரக கட்டடத்தின் சாளரங்கள் மீது கற்கள் வீசப்பட்டு, கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், கட்டடத்தின் மீது காவி நிறத்தில் நிறப்பூச்சு தெளிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு அருகில் தரித்துநின்ற பாக்கிஸ்தான் யுத்த விமானங்கள்!! தமிழ்நாட்டையும் விட்டுவைக்காத ஆபத்து
மேற்கொள்ளப்பட்ட போராட்டம்
அண்மையில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய பிரஜைகள் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் போது இந்திய அரசியல் கட்சியான பாஜகவின் ஆதரவாளர்கள் உயர்ஸ்தானிகரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதற்கிடையில், இந்தியாவுடன் நிலவும் பதற்றமான சூழலில், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு (NSC) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா பாகிஸ்தானுக்கு நீரின் உரிமையை தடுக்கும் முயற்சி செய்தால் அதை போர் அறிவிப்பாகவே கருதும் என்று தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் பாகிஸ்தான் - இந்தியா உறவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |