பாரீஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை
பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவரது பதக்கம் பறிபோயுள்ளது.
இதைத்தொடர்ந்து, தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கோரி சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீட்டு மனு
இந்த மேல்முறையீடு மனு வழக்கிற்கு இன்று (14) இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படவுள்ளதுடன் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா என்றும் முழு நாடும் எதிர்பார்த்துள்ளது.
மேலும், சச்சின், கங்குலி, உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள் வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கத்துக்கு தகுதியானவர் என்று கூறி தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஷ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |