இந்தியாவுக்கு எதிரான தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றும் : ரிக்கி பொண்டிங்
ஐ.சி.சி நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் இதற்கான புள்ளிப் பட்டியலில் அவுஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
இதற்கிடையே, இந்த ஆண்டின் கடைசியில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பையில் ( Border–Gavaskar Trophy) அஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.
டெஸ்ட் போட்டிகள்
இந்நிலையில், பார்டர் கவாஸ்கர் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான தொடரை 3-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா கைப்பற்றும் என முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில், இது 5 போட்டிகள் கொண்ட தொடராக உள்ளது. கடந்த இரண்டு முறை 4 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன. 5 டெஸ்ட் போட்டிகள் என்பதால் எல்லோரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.
இந்தத் தொடரை அஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வெல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 4 மணி நேரம் முன்

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
