பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்த அயர்லாந்து
அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணியுடனான டி20 தொடர் சமநிலையில் முடிவடைந்துள்ளது.
இதில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று(13) டப்ளினில் நடைபெற்றது.
இபோட்டியில் நாணய சுழட்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணிக்கு கேபி லூயிஸ் - ஏமி ஹண்டர் ஆரம்ப ஆட்டகாரர்களாக களமிறங்கினர்.
அபாரமான ஆட்டம்
இதில் ஏமி ஹண்டர் 9 ஓட்டங்களுடன் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஓர்லா பிரெண்டர்காஸ்ட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து ஆட்டத்தை வெளிப்படத்தினார்.
மேலும், மறுமுனையில் கேபில் லூயிஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஓட்டங்களை உயர்த்தினார்.
இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 119 ஓட்டங்களை இணைப்பாட்டமாக அமைந்தது.
தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேபி லூயிஸ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின்னரும் அதிரடியாக விளையாடிய கேபி லூயிஸ் இறுதிவரை களத்தில் இருந்ததுடன் 17 நான்கு ஓட்டங்கள், 2 ஆறு ஓட்டங்கள் என 119 ஓட்டங்களை சேர்த்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
இதன்மூலம் அயர்லாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
கடின இலக்கு
இலங்கை தரப்பில் அச்சினி குலசூரிய, ஷஷினி கிம்ஹானி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
அணியின் வீராங்கனைகளான விஷ்மி குணரத்ன ஒரு ஓட்டங்களுடனும், ஹாசினி பெரேரா 10 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் இணைந்த ஹர்ஷிதா சமரவிக்ரமா - கவிஷா தில்ஹாரி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்டங்களை உயர்தினர்.
இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 72 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.
எனினும், இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
அயர்லாந்து அணி தரப்பில் ஃப்ரீயா சார்ஜென்ட், ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்மூலம் அயர்லாந்து மகளிர் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் சமன்செய்தது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |