அதி சக்திவாய்ந்த ஏவுகணை.. இந்திய பாதுகாப்புத்துறையின் துல்லியமான வெற்றி!
இந்தியாவின் அஸ்ட்ரா பிவிராம் (Astra BVRAAM) ஏவுகணை (Air-to-Air Missile) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு பாதுகாப்பு மேம்பாட்டில் முக்கியமான ஒரு புதிய வெற்றியாக பார்க்கப்படும் நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் இந்திய விமானப்படை (IAF) ஆகியன இந்த சோதனை வெற்றியை உறுதிபடுத்தியுள்ளன.
கடந்த ஜூலை 11ஆம் திகதி அன்று, ஒடிசாவின் கடற்கரையை ஒட்டி Sukhoi-30 MK-I போர் விமானத்தில் இருந்து அஸ்ட்ரா ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.
ஆளில்லா வான்வழி இலக்கு
சோதனையில், அதிவேக ஆளில்லா வான்வழி இலக்குகளை வெற்றிகரமாக வீழ்த்தியுள்ள இந்த ஏவுகணை, துல்லியமான தாக்கத்தால் தனது செயல்திறனை நிரூபித்துள்ளது.
இந்த ஏவுகணையின் RF seeker (Radio Frequency), இலக்குகளை கண்டறிந்து தாக்குவதற்காக மிகவும் முக்கியமான ஒரு உதிரி பாகமாக உள்ளது. இது அதன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று.
குறிப்பாக இந்த ஏவுகணை, முழுமையாக DRDO-வால் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ளமை மிகப்பாரிய அந்நாட்டு பாதுகாப்புத் துறைக்கு முக்கிய சாதனையாகும்.
100 கிலோமீற்றருக்கு மேல் பாயும் திறன் கொண்ட இந்த Astra BVRAAM ஏவுகணை, நவீன வழிநடத்தல் மற்றும் வழிகாட்டி (Guidance & Navigation) அமைப்புக்களை கொண்டுள்ளது.
இதில், DRDOவின் பல ஆய்வகங்கள் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன. இந்த வெற்றியை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் DRDO தலைவர் சமீர் வி. கமத் பாராட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Bigg boss 9 elimination: முதல் வாரமே வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் துப்பாக்கி மூலம் குடும்பத்தை அச்சுறுத்திய நபர்: 4 மணிநேர போராட்டத்தில் சுட்டுப்பிடிப்பு News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam
