அமெரிக்க வரிகளால் இலங்கை மீது தாக்கம் செலுத்தும் இந்தியா
புதிய அமெரிக்க வரிகள் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைப் பாதிக்கும்போது, அமெரிக்க சந்தையில் இந்தியா குறிப்பிடத்தக்க ஏற்றுமதி நன்மையைப் பெறக்கூடும் பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், அமெரிக்காவுக்கான இலங்கையின் ஏற்றுமதியில் சுமார் 21 சதவீதம் (618 மில்லியன் டொலர்) மற்றும் பிலிப்பைன்ஸின் ஏற்றுமதியில் 17.2 சதவீதம் (2.35 பில்லியன் டொலர்) தற்போது இந்திய போட்டியினால் பாதிக்கப்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆடைகள், இலத்திரனியல் மற்றும் பைகள் போன்ற ஏற்றுமதிகள் பாதிக்கப்படலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் நிலை
அத்துடன், பிரேசில், மியான்மர், பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியாவின் ஏற்றுமதிகளும் பாதிக்கப்படுவதோடு, அவற்றின் பில்லியன் கணக்கான மதிப்புள்ள வர்த்தகம் இந்தியாவுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது.
2023 ஆம் ஆண்டில், இந்த பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து அமெரிக்கா 71.7 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்த, அதே நேரத்தில் அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதி மொத்தம் 87.3 பில்லியன் டொலராக இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
எனவே, முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தைப் பெற்றாலோ அல்லது அதிக அமெரிக்க வரிகளைத் தவிர்த்தாலோ இந்தியாவின் நிலை மேலும் மேம்படக்கூடும் என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |