இந்தியர்கள் மூவர் கைது..! 292 கிலோகிராம் கஞ்சா மீட்பு
இலங்கைக்கு சட்டவிரோதமாக கேரள கஞ்சாவை கொண்டு வர முயற்சித்த மூவர் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இந்தியாவில் உள்ள இராமநாதபுரத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூவர் கைது
இலங்கைக்கு, கடல் வழியாக கடத்த திட்டமிடப்பட்டிருந்த 292 கிலோகிராம் கஞ்சாவை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடற்கரைக்கு கொண்டு செல்ல தயாராகிக் கொண்டிருந்தபோது, ரகசியத் தகவலின் பேரில் இந்திய பொலிஸார் நடத்திய சோதனையில் கஞ்சா கடத்தல் இடம்பெறுவது தெரியவந்துள்ளது.
இதற்கமைய, கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan