இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழரசு எம்.பிக்கள்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(23) நடைபெற்றது.
கொழும்பில் உள்ள இந்தியத் உயர்ஸ்தானிகரின் இல்லமான 'இந்தியா ஹவுஸில்' நேற்றுப் பிற்பகல் 3.30 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
தேசிய அரசியல் பிரச்சினைகள்
இதில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், இரா.சாணக்கியன், வைத்தியர் ப.சத்தியலிங்கம், ச.குகதாசன், து.ரவிகரன், வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விபத்தில் சிக்கிக் காயமடைந்த ஞா.ஸ்ரீநேசனும், வெளிநாட்டுக்குச் சென்றுள்ள க.கோடீஸ்வரனும் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.
இதன்போது வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேசிய அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டன.






