அமெரிக்காவை சென்றடைந்தார் ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (23) அந்நாட்டு நேரப்படி காலை 8.50 மணிக்கு அமெரிக்காவின் ஜோன் எப். கெனடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஜோன் எப். கெனடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை நிரந்தர பிரதிநிதியும் முன்னாள் பிரதம நீதியரசருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த சந்தரசிறி ஜெயசூரிய உள்ளிட்டோரினால் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விஜயம்
இந்த விஜயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரதும் இணைந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று இரவு அமெரிக்காவின் நியூயோர்க் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஜனாதிபதி நாளை(24) புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் உரையாற்றவுள்ளார்.
அத்துடன், இந்த விஜயத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இரு தரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
அத்துடன், அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.



