சீனாவை வீழ்த்தி 2026 மகளிர் ஆசிய சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றது இந்தியா
2026 மகளிர் ஆசிய செம்பியன்ஸ் கிண்ண ஹொக்கி இறுதிப்போட்டியில் சீனாவை 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா கிண்ணத்தை வென்றுள்ளது.
இதன்படி, இந்தியா ஒட்டுமொத்தமாக 4வது முறையாக செம்பியன் பட்டம் வென்றது.
அத்துடன், தொடர்ந்து 3வது முறையாக கிண்ணத்தை தக்கவைத்து ஹெட்ரிக் சாதனையையும் படைத்துள்ளது.
இறுதிப் போட்டி
போபாலில் இடம்பெற்ற இன்றைய இறுதிப் போட்டியில் தீபிகா செஹ்ராவத் 2 கோல்கள் அடித்தார். நவ்நீத் கவுர் 1 கோல் அடித்தார். தீபிகா செஹ்ராவத் ஆட்ட நாயகி விருது பெற்றார்.

அத்துடன், தொடரில் 12 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்த வீராங்கனையாகவும் அவர் திகழ்ந்தார். போட்டியின் முதல் பாதியில் சீனா 1-0 என முன்னிலை பெற்றது.
ஆனால் 3வது கால்பகுதியில் இந்தியா மூன்று கோல்களை அடித்து ஆட்டத்தைத் தன்வசப்படுத்தியது. சலீமா டெட் தலைமையிலான இந்திய அணி, இந்த போட்டித் தொடரின் 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று தோல்வியே இல்லாமல் கிண்ணத்தை கைப்பற்றியது.