அதிவேக நெடுஞ்சாலையில் டிசம்பர் முதலாம் திகதி முதல் புதிய கட்டுப்பாடுகள்! வெளியான அறிவிப்பு
எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல், துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கான அனுமதிப்பத்திரம் கொண்ட வாகனங்களுக்கு மாத்திரமே துறைமுக அணுகல் உயர்மட்ட அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்படவுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனை அறிவித்துள்ளது.
டிசம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறை
இதன்படி, உரிய அனுமதிப்பத்திரம் இல்லாத வாகனங்களுக்கு குறித்த அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுக நுழைவு மேம்பால வீதியை அதிவேக நெடுஞ்சாலையாகப் பிரகடனப்படுத்தி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.