இந்திய அணி அபார வெற்றி:இலங்கை அணி தலைவருக்கு குவியும் பாராட்டுக்கள்
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று இடம்பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 373 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டவர்கள்
விராத் கோஹ்லி குவித்த 45ஆவது சர்வதேச ஒருநாள் சதம், ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில் ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் என்பன இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டன.
ஷுப்மான் கில், ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் 19.4 ஓவர்களில் 143 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஷுப்மான் கில் 67 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 83 ஓட்டங்களையும் ரோஹித் ஷர்மா 60 பந்துகளில் 11 பவுண்டறிகளுடன் 70 ஓட்டங்களையும் பெற்றனர். இருவரும் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.
That's that from the 1st ODI.#TeamIndia win by 67 runs and take a 1-0 lead in the series.
— BCCI (@BCCI) January 10, 2023
Scorecard - https://t.co/262rcUdafb #INDvSL @mastercardindia pic.twitter.com/KVRiLOf2uf
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் கசுன் ராஜித்த 10 ஓவர்களில் 3 விக்கெட்களை வீழ்த்தியபோதிலும் 88 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க டி சில்வா விக்கெட் எதுவும் இன்றி 67 ஓட்டங்களையும் துனித் வெல்லாலகே விக்கெட் எதுவும் இன்றி 65 ஓட்டங்களையும் சாமிக்க கருணாரட்ன ஒரு விக்கெட்டைக் கைப்பற்றி 54 ஓட்டங்களையும் வாரி வழங்கியிருந்தனர்.
இலங்கை அணியின் துடுப்பாட்டம்
374 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 306 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இலங்கை அணி சார்ப்பில் இறுதி வரை போராடிய அணித் தலைவர் தசுன் சானக ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸங்க 72 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் உம்ரன் மாலிக் 57ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைபற்றினர்.
அதனடிப்படையில் 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.