இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றை T20 உலகக் கிண்ணப் போட்டிக்குரி டிக்கெட்டுக்களைப் பெற்றவர்கள் மாத்திரம் மைதான வளாகத்திற்குள் வருமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
டிக்கெட் கிடைக்காதவர்கள் மைதானத்தைச் சுற்றித் திரிவை தவிர்க்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
டிக்கெட்டோடு வாருங்கள்
இன்று(15.02.2026) மாலை 07 மணிக்கு இந்தியா - பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனால், மைதானத்தின் அனைத்து நுழைவாயில்களும் மதியம் 03.00 மணிக்கு பொதுமக்களுக்காக திறக்கப்படும். அனைத்து டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்பனையாகி முடிந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டிக்கெட் பெற்றுள்ள ரசகிர்கள் டிக்கெட்டுடன் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
டிக்கெட் இல்லாத பொதுமக்கள் அமைதியாக தங்களது இல்லங்களில் இருந்து தொலைக்காட்சி வழியாக போட்டியை பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

டிக்கெட் பெற முடியாத ரசிகர்கள் டிக்கெட் பெறும் நோக்கில் மைதானத்தைச் சுற்றி திரிவை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு மற்றும் உள்ளூர் ரசிகர்களும் போட்டியை அமைதியாகவும், ஒழுங்காகவும் ஒருவருக்கொருவர் மரியாதை காட்டியும் பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam