T20 உலகக் கிண்ணம்! இந்தியா - பாகிஸ்தான் போட்டியைக் காண செல்பவர்களுக்கு அவசர அறிவிப்பு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டியை காண மைதானத்திற்கு வருபவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு விரைவாக மைதானத்திற்கு வருகைத் தருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறைந்தது சுமார் 4 மணித்தியாலங்களுக்கு முன்பாக மைதானத்திற்கு வருகைதருவது சிறந்தது என்றும், போட்டியைப் பார்வையிடுவதற்கான நுழைவு பிற்பகல் 03.00 மணியில் இருந்து ஆரம்பமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பு போக்குவரத்து ஏற்பாடு
எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை, கொழும்பு ஆர். பிரேமதாச(கெத்தாராம) விளையாட்டு அரங்கத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர் போட்டி நடைபெறவுள்ளது.

இதற்காக சிறப்பு போக்குவரத்துத் திட்டம் மற்றும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மாலை 07 மணிக்கு குறித்த கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகும் நிலையில், மைதானத்திற்கான உள் நுழைவு மாலை 03 மணிக்கு ஆரம்பமாவதுடன், போட்டியை பார்வையிட வருபவர்கள் காலம் தாழ்த்தாது வருகைத் தருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
அழகி படத்தில் நடித்த இந்த நடிகரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam