ஈழத்தமிழர் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை புறம்தள்ளும் இந்தியா: சீனாவை எதிர்க்கும் பின்னணியில் அமெரிக்கா(Video)
சீனாவின் பணப்புழக்கத்தை ஈடுசெய்ய வேண்டும் என்பதால் இந்திய அமெரிக்காவிடம் தொடர்ந்தும் கையேந்தும் நிலை காணப்படுவதாக பிரித்தானியாவில் உள்ள அரசியல் விமர்சகர் அருள் தெரிவித்தார்.
மேலும், ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதை இந்தியா விரும்பாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் இலங்கை தொடர்பான நகர்வுகள் குறித்து லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், சீனாவின் உற்பத்தி கூட்டாண்மையை தடை செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட கூட்டணியில் இந்தியா, அவுஸ்திரேலிய போன்ற நாடுகளும் அங்கம் வகிக்கின்றன என்றார்.
இந்நிலையில் இலங்கை தீவில் சீனா மற்றும் இந்தியாவின் ஆதிக்க நிலைகள் தொடர்பிலும், அதனை கையாள அமெரிக்க முன்னெடுக்கும் நகர்வுகள் தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு...
யாழில் மாவீரர் நினைவேந்தலை குழப்பும் முயற்சி: பொதுமக்களின் எதிர்ப்பினால் வெளியேற்றப்பட்ட நிறுவனம் (Photos)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |