யாழில் மாவீரர் நினைவேந்தலை குழப்பும் முயற்சி: பொதுமக்களின் எதிர்ப்பினால் வெளியேற்றப்பட்ட நிறுவனம் (Photos)
மாவீரர் வார நினைவேந்தலில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகே தென்னிலங்கை நிறுவனமொன்றின் ஏற்பாட்டில் விளம்பர நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் தற்போது அனுஷ்டிக்கப்படு வருவதுடன், தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மண்டபமொன்று திறந்து வைக்கப்பட்ட நிலையில் பலரும் நாளாந்தம் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று(24.11.2023) இரவு தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகே தென்னிலங்கையைச் சேர்ந்த தனியார் அறக்கட்டளை நிறுவனத்தின் விளம்பர வாகனமொன்று வந்ததுடன் அங்கு பாடல்களை சத்தமாக ஒலிக்கவிட்டு நிறுவனம் தொடர்பான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாவீரர் வார செயற்பாட்டுக்கு இடையூறு
இதனையடுத்து அங்கு சென்ற சிலர் நினைவேந்தல் நடைபெறுவதாகவும் பாடலை சத்தமாக ஒலிபரப்ப வேண்டாம் என கூற பாடல் நிறுத்தப்பட்டுள்ளது.
எனினும் சிறிது நேரத்தில் அங்கு வந்திருந்த பெரும்பான்மை இனத்தவர்கள் மிகவும் சத்தமாக சிங்கள மொழி பாடல்களை ஒலிக்க விட்டு ஆடியதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக கூறிய குறித்த தனியார் அறக்கட்டளை நிறுவனம், மாவீரர் வாரம் தற்போது அனுஷ்டிக்கப்படு வருகிற நிலையில் அதனை குழப்பும் விதத்தில் செயற்பட்டதாக அங்கிருந்தவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, எதிர்ப்பு வலுக்கவே குறித்த நிறுவனத்தினர் வாகனத்தை அங்கிருந்து நகர்த்தி சென்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
