மீனவர்களின் பிரச்சினையை பயன்படுத்தி மூன்றாம் தரப்பொன்று குளிர்காய முற்படுகின்றது: வீ. இராதாகிருஷ்ணன்

India Fishermen SL VelusamiRadhakrishnan
By Thirumal Feb 05, 2022 05:21 PM GMT
Report

தமிழக மீனவர்களுக்கும், வடக்கு மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பொன்று குளிர்காய முற்படுகின்றது. இதற்கு இரு நாட்டு அரசுகளும் இடமளிக்கக்கூடாது எனவும், இப்பிரச்சினையை விரைவில் சுமூகமாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் வடபகுதி மற்றும் இந்தியாவில் தமிழகம் ஆகிய பகுதிகளில் வாழும் மீனவ சமுதாயத்துக்கிடையிலான பிரச்சினை பூதாகரமாகியுள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள், எமது நாட்டு கடல் வளத்தையும், மீனவர்களின் உபகரணங்களையும் அழிப்பதாக வடபகுதி மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். தமிழகத்திலும் தமிழர்கள் தான் வாழ்கின்றனர்.

வடக்கிலும் தமிழர்கள் தான் வாழ்கின்றனர். எனவே, இதனை தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள முரண்பாடாக சிலர் பார்க்கின்றனர்.

எனவே, இவ் விவகாரத்தை நாம் மிகவும் அவதானத்துடன் அணுக வேண்டும். இப் பிரச்சினையைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பொன்று குளிர்காய முற்பட்டால் அது பெரும் பிரச்சினையாக அமைந்து விடும்.

எனவே, இரு நாடுகளினதும் அரசும், அமைச்சர்களும் இணக்கப்பாட்டு அடிப்படையில் இப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முன்வரவேண்டும்.

அதேவேளை, எமது கட்சியின் பதுளை பிரதேச சபை உறுப்பினர் சிவநேசன் மீது, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இச்சம்பவத்தை நாம் கண்டிக்கின்றோம். தோட்டப்பகுதியில் உள்ள காணியை பாதுகாக்க முற்பட்டதால் தான் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் காணிகள் அபகரிக்கப்பட்டது போல, மலையக பகுதிகளில் உள்ள காணிகளையும் கையகப்படுத்தும் முயற்சி எடுக்கப்படுகின்றது. இதனை தடுத்து நிறுத்த நாம் ஒன்றுபட வேண்டும் எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US