இந்தியா இலங்கைக்கு தனது படைகளை அனுப்புவது தொடர்பில் உயர் ஸ்தானிகராலயத்தின் திட்டவட்ட தகவல்
இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் ஊடக அறிக்கைகள் தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்த விடயத்தை உயர் ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுக்க விரும்புவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அந்த பதிவில்,
இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பவது தொடர்பான இந்த அறிக்கைகள் மற்றும் அத்தகைய கருத்துக்கள் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு உறுதுணையாக இருப்பதாகவே இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் நேற்று தெளிவாக தெரிவித்திருந்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.
The Spokesperson of Ministry of External Affairs of India clearly stated yesterday that #India is fully supportive of Sri Lanka's democracy, stability and economic recovery. (2/2)
— India in Sri Lanka (@IndiainSL) May 11, 2022
இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி வைத்து அரசியல் அமைப்பின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்ய வேண்டுமென இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் சுவாமி வலியுறுத்தியிருந்தார்.
இதனை தொடர்ந்தே இலங்கையில் இந்திய இராணுவம் தரையிறக்கப்படுவதாக பரவலாக தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சுப்ரமணியம் சுவாமி தொடர்ச்சியாக ராஜபக்சர்களுடன் அதிலும் குறிப்பாக மகிந்த ராஜபக்சவுடன் நட்பு ரீதியான உறவை முன்னெடுத்து வருவதும்ன சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கையை மீட்க எப்போதும் தயார்- மீண்டும் அறிவித்தது இந்தியா! |
இலங்கையில் இந்திய இராணுவத்தை தரையிறக்குமாறு கோரிக்கை (Photos) |

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நயன் வீட்டில் மட்டுமல்ல செல்வராகவன் வீட்டிலும் விசேஷம்! கோயிலில் இருந்து வெளியான புகைப்படம் Manithan
