‘‘இலங்கை வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு’’
13வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, அதற்கும் அப்பால் சென்று அதிகார பரவலாக்கலை அர்த்தமுள்ளதாக மாற்றுவதாக இலங்கை அரசு, இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பது இந்திய அரசின் நிலைப்பாடு என இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ச வர்தன் கூறியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இந்திய வெளிவிவகார செயலாளர் இதனை கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்தியாவின் நிலைப்பாட்டிலேயே உள்ளது. 1983 ஆம் ஆண்டு முதல் இந்தியா இந்த பிரச்சினையை தொடர்ந்தும் எதிர்நோக்கி வந்துள்ளது.
எதிர்காலத்திலும் எம்முடன் இருந்து, முக்கியமான தேசிய பிரச்சினைக்கு சரியான தீர்வை பெற்றுக்கொடுக்கும் வரை இந்தியா எமக்கு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் இந்திய வெளிவிவகார செயலாளர் உறுதியளித்ததாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்சவர்தனை நேற்று சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே சுமந்திரன் இதனை கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
‘‘இலங்கை, இந்திய நிலைப்பாடு தொடர்பில் ஜனாதிபதி கூறியது’’
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்த இந்திய வெளிவிவகார செயலாளர்

