மண்ணில் புதையும் இந்தியாவின் புனித நகரம்!மரண பயத்தில் வெளியேறும் மக்கள்
இந்தியாவில் உள்ள ஒரு முக்கிய இடம் தொடர்ந்து புதைந்து வருவது தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் ஜோஷ்மித் நகரம் இவ்வாறு மண்ணில் புதைந்து வரும் நிலையில் மரண பயத்தில் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் இன்று பல்வேறு தரப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது.
இதற்கமைய, ஜோஷிமத் நகரத்தின் பல பகுதிகளில் கட்டிடங்கள் விரிசல் ஏற்பட்டு பூமிக்குள் புதையுண்டுள்ளன.
தற்போதைய நிலையில் சுமார் 600 கட்டிடங்கள் பூமிக்குள் புதையும் அபாயத்தில் உள்ளது. இதனால் ஜோஷிமத் நகரைவிட்டு மக்கள் பெருமளவில் வெளியேறி வருகின்றனர்.
அத்துடன் ஹெலிகாப்டர்களுடன் தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளனர்.
ஜோஷிமத் நகரம் புதையுண்டு போவதற்கு காரணம் இமயமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
