மோடிக்கு தயாரான ஆவணம்! தமிழ் கட்சிகளின் தலைவர்கள் எடுத்த முடிவு
இலங்கை தமிழர்களுக்கான தீர்வு தொடர்பில் இந்திய பிரதமருக்கான கோரிக்கை ஆவணம், அடுத்த வாரம் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
பெரும்பாலும் எதிர்வரும் புதன்கிழமையன்று இந்த ஆவணம் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இதனை எமது செய்திச்சேவையிடம் தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணத்தில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் கையெழுத்திட்ட நிலையில் ஏனைய தமிழ்க்கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இந்த ஆவணத்தில் கையெழுத்திடவில்லை.
எனினும் அவர்கள் தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைகள் விடயத்தில் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்க உறுதியளித்துள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.