தீவிரம் அடையும் இந்தியா - பாகிஸ்தான் போர்: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அதிரடி நடவடிக்கை
இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூர் நகரங்களுக்கான விமானங்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ரத்து செய்துள்ளது.
எதிர்காலத்தில் சர்வதேச விமானங்களுக்கு கராச்சி மற்றும் லாகூரின் விமான நிலையங்கள் திறக்கப்பட்டவுடன், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த பின்னர் மீண்டும் சேவையை முன்னெடுப்போம் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் வாரத்திற்கு சராசரியாக 8 விமான சேவைகளை பாகிஸ்தானுக்கு மேற்கொள்கிறது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சிக்கு தலா 4 விமான சேவைகள் முன்னெடுப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பிராந்திய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் இலங்கை அரசாங்கமும் விமான நிறுவனமும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயணிகளின் பாதுகாப்பை முதன்மையான முன்னுரிமையாக கொண்டு மேலும் நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 21 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
