இந்திய - பாகிஸ்தான் போர் பதற்றம்: இந்தியாவின் 32 விமான நிலையங்கள் மூடல்
இந்திய- பாகிஸ்தான் போர் தொடர்ந்தும் தீவிரமடைந்து வருகிறது இந்தியாவின் எல்லையோர நகரங்கள் மீது பாகிஸ்தானின் தொடர்ந்தும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அந்த ட்ரோன்களை தாம் வானிலேயே தகர்த்து வருவதாக இந்தியா தெரிவித்து வருகிறது.
இதன்படி பாகிஸ்தான் இந்தியாவின் காஸ்மீர் முதல் குஜராத் வரையிலான மாநிலங்களின் பல நகரங்களை நோக்கி தமது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக,பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் மீது இன்று அதிகாலை இந்திய இராணுவம் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி நகரங்களில் உள்ள நுர்கான், முரித், ரபிக் விமான தளங்களை இந்திய இராணுவம் வானில் இருந்து தரையை தாக்கும் ஏவுகணைகள் மூலமாக தாக்கியுள்ளது.
பாகிஸ்தானின் தாக்குதல்
இதனை பாகிஸ்தானும் உறுதிப்படுத்தியுள்ளது தமது, மூன்று விமானப்படை தளங்கள் இந்திய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாகக் பாகிஸ்தான் கூறியுள்ளது.
அதில் ஒன்று தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகரில் உள்ள இராணுவத் தலைமையகத்திற்கு அருகில் உள்ளது என்றும் பாகிஸ்தானிய இராணுவம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு எதிராக தமது தாக்குதல்களுக்காக காத்திருக்குமாறு பாகிஸ்தானின் இராணுவப் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில் பஞ்சாப்பில் அமைந்துள்ள அமிர்தசரஸ், பொற்கோவில் மீதான பாகிஸ்தானின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை இந்திய இராணுவம்; முறியடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு: காஸ்மீரின்
அமிர்தசரஸ் இந்திய பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள முக்கிய நகரம் என்பதால் உச்சபட்ச பாதுகாப்பை இந்திய இராணுவம் வழங்கி வருகிறது. இதற்கிடையில் பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள மோதல் எதிரொலியாக, எல்லை மாநிலங்களில் உள்ள 32 விமான நிலையங்களை மூட, இந்திய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது
2025 மே 9 முதல் மே 15 காலை 5.29 மணி வரை இந்த விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேவேளை பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் காரணமாக காஸ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய எல்லையோர மாநில மக்கள் பாதுகாப்புக்கருதி பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஜம்மு: காஸ்மீரின் பாராமுல்லாவில் இருந்து குஜராத்தின் கட்ச் பகுதி வரை, 26 இந்திய நகரங்களை குறி வைத்து, பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |