விமான நிலையங்கள் மீது பாகிஸ்தானின் தாக்குதல்..இந்தியாவின் அதிரடி நகர்வு
இந்தியாவின் ஸ்ரீநகர் விமான நிலையம் மற்றும் அவந்திபோரா விமான தளத்தின் மீது பாகிஸ்தான் நடத்த முற்பட்ட ட்ரோன் தாக்குதலை இந்தியா தடுத்துள்ளது.
பாகிஸ்தான் இராணுவம் ஸ்ரீநகர் மற்றும் தென் காஷ்மீரின் அவந்திபோரா விமான தளத்தில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது.
இருப்பினும், இந்தியா தனது அதிநவீன வான்வழி பாதுகாப்பு அமைப்புக்கள் மூலம் இந்த முயற்சியை வெற்றிகரமாக தடுத்து விட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
படுதோல்வி
இன்று மாலை, ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பல இடங்களில் வெடிப்பு சத்தங்கள் எழுந்துள்ளன.
அத்துடன், சைரன் ஒலியும் ஒலிக்கப்பட்டதுடன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மின்தடையும் நடைமுறைபடுத்தப்பட்டது.
இந்த தாக்குதல் கடந்த மூன்று நாட்களில் பாகிஸ்தானால் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பாரிய முயற்சியாகும்.
வெள்ளிக்கிழமை மட்டும் இந்தியாவிலுள்ள 26 இடங்களில் ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஸ்ரீநகர், பரமுல்லா, ஜம்மு, நாக்ரோட்டா, பத்தான்கோட், ஜைசல்மேர், பார்மர் உள்ளிட்டவை அடங்கும்.
தொடர் தாக்குதல்
கடந்த சில நாட்களில் 36 இடங்களில் பாகிஸ்தான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல்களை இந்திய இராணுவம் தடுத்து, பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
பாகிஸ்தான் பக்க எல்லைப் பகுதிகளில் மூன்று நாட்களாக மோதி தாக்குதல் மற்றும் வன்கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் - ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்து பல்வேறு வழிகளில் இந்திய இராணுவ கட்டிடங்களை குறிவைத்து தாக்க முயன்றாலும், இந்தியா அதற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.
அதேவேளை, பாதுகாப்பு காரணமாக இந்தியா தற்காலிகமாக 24 விமான நிலையங்களை மே 150ஆம் திகதி காலை வரை மூடியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
