எரிபொருளுக்காக இந்தியாவிடம் 500 மில்லியன் டொலர்களை கடனாக பெற்ற இலங்கை!
பெற்றோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களின் புதிய கடன் வரியை இந்தியா வழங்கியுள்ளது.
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர், எஸ். ஜெய்சங்கர், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸுக்கு எழுதிய கடிதத்தில் இந்த முக்கியமான ஆதரவை வழங்கியுள்ளார் என்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
2021 டிசம்பரில் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய விஜயத்தின் போது அடையாளம் காணப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பின் நான்கு விடயங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளாக உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் இந்தியா இலங்கைக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான அந்நியச் செலாவணி ஆதரவை வழங்கியிருந்தமையை உயர்ஸ்தானிகரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
