இலங்கையுடனான கடற்தொழிலாளர் பிரச்சினை - இந்திய உயர்ஸ்தானிகர் கூறியுள்ள விடயம்
இலங்கையுடனான கடற்தொழிலாளர் பிரச்சினையை தீர்க்க மனிதாபிமான அணுகுமுறையை இந்தியா நாடுகிறதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை கடற்தொழிலாளர்களுக்கு இந்தியா அனைத்து வழிகளிலும் உதவ முயற்சிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வடக்கு தொடருந்துப் பாதையின் மஹோ - ஓமந்தை பாதையில் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படுவதை முன்னிட்டு இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் பங்குகொள்வதற்காக உயர்ஸ்தானிகர் அனுராதபுரத்திற்கு சென்றிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் அநுராதபுரம் ஜயஸ்ரீ மஹாபோதியாவில் பௌத்த மதகுருமார்கள் மத்தியில் உரையாற்றும் போதே இந்திய உயர்ஸ்தானிகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த பௌத்த மதகுருமார்கள்
இதன்போது, நெருக்கடியான காலத்தில் இலங்கைக்கு வழங்கிய அனைத்து உதவிகளுக்கும் பௌத்த மதகுருமார்கள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இலங்கை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவது குறித்து எழுப்பப்பட்ட கவலைகளையும் மதகுருமார்கள் இதன்போது வெளியிட்டுள்ளனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே பாக்லே, பிரச்சினையை மனிதாபிமான முறையில் கையாள்வதே இந்தியாவின் அணுகுமுறை என்று கூறியுள்ளார்.
வடக்கு தொடருந்துப் பாதையின் மஹோ - ஓமந்தை வழித்தடத்தின் பாதைகளை மேம்படுத்தும்
திட்டம், இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்தியன் ரயில்வே கொன்ஸ்ட்ரக்ஷன்
இன்டர்நேஷனல் மூலம் 91.27 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய கடன் திட்டத்தின்
கீழ் கையாளப்படுகிறது.

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam
