இலங்கைக்கான புதுடில்லியின் ஆதரவை பாராட்டியுள்ள இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர்
நிபந்தனைகள் இல்லாமல் வந்த தனது நாட்டிற்கு புதுடில்லி அளித்த ஆதரவை இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட பாராட்டியுள்ளார்.
அத்துடன் இந்தியாவின் உதவிப்பொதிகள் நெகிழ்வானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை இருந்தபோது, 4 பில்லியன் டொலர் நிதியுதவி அளித்தது. அத்துடன் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஜப்பான் போன்றவற்றுடன் இணைந்து செயற்பட்டது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு
அடிப்படையில், இந்தியாவே, இலங்கையின் கடன் மறுசீரமைப்பை ஆதரித்த முதல் கடன் வழங்கும் நாடாக அமைந்துள்ளது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சீனா ஒரு கடிதத்தை கொடுத்துள்ளது, ஆனால் தற்போது சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கும் தேவைகளை பூர்த்தி செய்ய, அது போதுமானதாக இல்லை.எனவே இந்த விவாதம் இன்னும் தொடர்கிறது என்று மொரகொட குறிப்பிட்டுள்ளார்.
உயர்மட்ட இலங்கை பெற்றோலியம், இந்தியாவின் வருடாந்த பாதுகாப்பு உரையாடல் என்பன இந்த மாத இறுதியில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதானி குழுமத்தின் திட்டங்கள் குறித்து கருத்துரைத்த அவர்,அதானி
குழுமம் மிகவும் வலுவாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.