இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் கிடைத்துள்ள அனுமதி
2015 ஜன 9ஆம் திகதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள், சட்டப் பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளனர்.
மத்திய அரசு அனுமதி
இவர்கள் இந்தியாவில் தாங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், 2015 ஜனவரி 9ஆம் திகதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப் பூர்வமாக தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல. சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளில் இருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.
இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் காரணமாகவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும் இலங்கை தமிழர்கள் பலர் உலக நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர் பல்வேறு நாடுகள் அவர்களுக்கு குடியுரிமையும் வழங்கியுள்ளது.
இந்தியக் குடிமக்கள்
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இயற்றப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025ன் படி, இந்தியாவிற்குள் கடவுச்சீட்டு அல்லது செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டினரின் நுழைந்தாலோ அல்லது தங்கினாலோ அந்நபருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.
நடப்புக்கு வந்துள்ள புதிய குடிநுழைவு, வெளிநாட்டினா் சட்டத்தின்கீழ் நேப்பாளம், பூட்டான் நாடுகளிலிருந்து நிலம் அல்லது வான்வழியாக இந்தியா செல்வதற்கு அந்த நாட்டு மக்களுக்கும் இந்தியக் குடிமக்களுக்கும் செப்டம்பர் 1 முதல் கடப்பிதழ் அல்லது விசா தேவை இல்லை.
எனினும் சீனா, ஹாங்காங், பாகிஸ்தானிலிருந்து வரும் நேப்பாளம், பூட்டான் மக்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது.





சிறப்பு மிக்க அந்த விழாவில் அமெரிக்காவையும் குறிப்பிட்டிருக்கலாம்: சீனா குறித்து ட்ரம்ப் ஏமாற்றம் News Lankasri
