மோடியின் பாரிய திட்டம்.. பாகிஸ்தான் - சீனாவுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை
பிரதமர் மோடியின் அரசாங்கம், தனது விமான பாதுகாப்பு திறனை அதிகரிக்க ரஷ்யாவில் இருந்து Container-S OTH (Over-the-Horizon) ரேடார் அமைப்பை பெறும் திட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ரேடார், சுமார் 3000 கிலோமீற்றர் தொலைவில் உள்ள விமானங்களை கண்டறியும் திறன் கொண்டது என கூறப்படகின்றது.
எனவே, சீனாவின் J-20 மற்றும் பாகிஸ்தானுக்காக சீனா உருவாக்கும் J-35A ஸ்டெல்த் யுத்த விமானங்களைக் கூட இந்தியா முன்கூட்டியே கண்டறிந்து எதிர்வையும் திட்டங்களை உருவாக்க முடியும்.
அதிநவீனமயமானது..
மேலும், அந்த Container-S Radar, ரஷ்யாவின் RTI Systems நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 29B6 எனப்படும் அதிநவீன ரேடார் அமைப்பாகும்.
இது ஓவர்த்-தி-ஹொரைசன் (OTH) தொழில்நுட்பம் கொண்டது. இது நிலத்தின் வளைவுகளை மீறி ionosphere ஊடாக ரேடியோ அலைகளை அனுப்பி மிக நீண்ட தூரங்களில் உள்ள இலக்குகளை சரியாகக் கண்காணிக்கிறது.
இதன் மூலம், 5000 இலக்குகளை ஒரே நேரத்தில் கண்காணிக்கலாம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை கூட கண்டறியும் திறன் கொண்டது. F-35 போன்ற நவீன ஸ்டெல்த் விமானங்களையும் கண்டறிய முடியும்.
இந்தியாவின் நிலையான சர்வதேச எல்லைகளிலேயே இந்த ரேடாரை அமைத்தால் கூட சீனாவையும் பாகிஸ்தானையும் முழுமையாக கண்காணிக்க முடியும்.
மேலும், எதிரி நாடுகள் இதனை தாக்க முயன்றால் கூட, இந்தியாவுக்கு பதிலடி அளிக்க போதுமான நேரம் கிடைக்கும்.
அத்துடன், பாதுகாப்பு வல்லுநர்கள் இந்த நடவடிக்கை இந்தியாவை விமான பாதுகாப்பு வலயத்தில் முக்கிய முன்னேற்றத்துக்கு இட்டுச் செல்லும் என தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
