இலங்கையில் பேச்சுவார்த்தை நடத்தும் இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள்
இலங்கை யுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தவும், பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மைக்கும், இந்தியா தனது உறுதியான தீர்மானத்தை வெளிப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு உறவுகள்
இலங்கை வந்துள்ள, இந்திய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங், இலங்கையின் உயர்மட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா ஆகியோருடன், இன்று கொழும்பில் தனித்தனி சந்திப்புகளை நடத்தினார்.

இதன்போது, இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இராணுவ பரிமாற்றங்கள் மற்றும் கூட்டு பயிற்சி வாய்ப்புக்கள், திறன் மேம்பாடு, பேரிடர் முகாமைத்துவ ஒத்துழைப்பு மற்றும் மனிதாபிமான உதவி உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பிலும், இந்த சந்திப்பின் போது பேசப்பட்டது.
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri