அமைச்சருக்கு சங்கடம் : தலைமை அதிகாரி பதவி விலகல்
சீனி தொழில்துறை தொடர்பான சமூக ஊடகப் பதிவு தொடர்பில், நுவான் தர்மரத்ன, பெல்வத்த, சீனி தொழில் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி (COO) பதவியில் இருந்து விலகியுள்ளார்.
அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி விடுத்த கோரிக்கையை அடுத்தே இந்த பதவி விலகல் நிகழ்ந்துள்ளது.
புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன்
இது தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமைச்சர் ஹந்துன்நெத்தி, தர்மரத்னவை பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏனெனில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட கருத்துக்கள், தமது அமைச்சின் உத்தியோகபூர்வப் பணிக்கு ஒத்துப்போகவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய அரசாங்கம் பதவியேற்றவுடனேயே, 2024 அக்டோபரில் அமைச்சர் விஜித ஹேரத்தால் தர்மரத்ன இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
சர்ச்சைக்கு பதிலளித்துள்ள தர்மரத்ன, தாம் எந்தவொரு இரகசியத் தகவலையும்கசியவிடவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
