இலங்கைக்கு பெரும் செக் வைத்த இந்தியா
இலங்கைக்கு மற்றுமொரு கடனை வழங்குவதில் இந்தியா தயக்கம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு எரிபொருளை வழங்குவதற்காக இந்தியா முன்கூட்டியே பணத்தை பெற்றுகொள்ள எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடன் வழங்க மறுப்பு
சமகாலத்தில் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் கடனில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருளுக்காக 3.5 பில்லியன் டொலர் கடன் எல்லைகளை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் மேலும் இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இலங்கைக்கு தொடர்ந்தும் சிக்கல்
எரிபொருள் கொள்வனவுக்கான 500 மில்லியன் டொலர் கடன் எல்லை வசதி இந்தியாவிடம் இருந்து புதிய அனுமதியை இலங்கை எதிர்பார்க்கிறது.
எனினும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் உடனடியாக கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.
May you like this Video