பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் அதிரடி நடவடிக்கை
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா தடையை அறிவித்துள்ளது.
காஷ்மீரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையிலேயே குறித்த நடவடிக்கையை இந்தியா எடுத்துள்ளது.
இந்தத் தடை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிந்து நதி ஒப்பந்தம்
குறித்த அறிக்கையில் தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுக் கொள்கையின் நலனுக்காக இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 1960ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக சிந்து நதியின் 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு கிடைக்கப்பெறுகின்றது.
தற்போது, குறித்த ஒப்பந்தத்தை கைவிட உள்ளதாக இந்தியா அறிவித்துள்ள நிலையில், இது பாகிஸ்தானுக்கு கிடைக்கும் நீருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
