இந்தியா-பாகிஸ்தான் இடையில் நீரால் பெரும் ஆபத்து..
இந்தியா-பாகிஸ்தானுக்கிடையிலான தாக்குதலுக்கு பதிலடி வழங்க நினைத்துள்ள இந்தியா இராணுவ ரீதியாக தாக்குதல் நடத்தாமல் 1960ஆம் ஆண்டு செய்யப்பட்ட சிந்துநதி ஒப்பந்தத்தில் கை வைத்துள்ளதன் மூலம் பாகிஸ்தானுக்கு கிடைக்கும் நீருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பல்கழைக்கழக பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இந்தியாவும்-பாகிஸ்தானும் 1947ஆம் ஆண்டு சுதந்திரதட பெற்றதிலிருந்தே பகைமையான நாடுகளாகதான் இருக்கின்றன.
1971ஆம் ஆண்டிற்கு பிறகு இருநாடுகளுக்குமிடையில் சிறிய சிறிய யுத்தங்கள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருந்தது. இந்தநிலையில் கடந்த 22ஆம் திகதி பஹல்ஹாமில் நடந்த தாக்குதலுக்கு பின்னர் இந்த போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
1960ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக சிந்து நதியின் 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு கிடைக்கப்பெறுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் அலசி ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
