முழு அளவிலான போருக்கு தயாராகும் இந்தியா : எழுந்துள்ள அச்சம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இது, முழு உலகிற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முழுமையான போராக வெடிக்கலாம் என்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச விசாரணைக்கும் அழைப்பு
எனினும் காஸ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, தீவிரவாதிகளின் ஆதரவாளர்களே மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள இந்தியா,அவர்களையே குறிவைப்பதால், உடனடியாக பாகிஸ்தானுக்கு எதிராக முழு அளவில் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல்களை மேற்கொண்ட தீவிரவாதிகள், பாகிஸ்தானுடன் தொடர்புடையவர்கள் என்பதற்கு, தொழில்நுட்பம், நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் காது சாட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாக இந்தியா கூறுகிறது.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
அத்துடன் சர்வதேச விசாரணைக்கும் அழைப்பு விடுத்துள்ளது. எனினும்கூட. தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஆதரிப்பதாக குற்றம் சாட்டும் இந்தியா, அந்த நாட்டுக்கு பதிலடி கொடுக்க இன்னும் உறுதியாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அது ஒரு முழுமையான போருக்கு இடமளிக்காமல் அளவிடப்பட்ட பதிலடியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
