உலகின் உயரமான போர்முனையான சியாச்சினில் முதல் பெண் இராணுவ அதிகாரி நியமனம்
சுமார் 20ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான காரகோரம் மலைத்தொடரின் சியாச்சின் பனிச்சிகர பகுதியில் வரலாற்றில் முதன்முறையாக இந்திய பெண் இராணுவ அதிகாரி பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
20 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள உலகிலேயே உயரமான போர்முனையாக சியாச்சன் பனிச்சிகர பகுதி கருதப்படுகிறது.
கேப்டன் சிவா சவுகான்
இங்கு இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள், கடும் குளிருடனும் போராட வேண்டியுள்ளது.
இந்த நிலையில் சியாச்சினில் முதல்முறையாக, கேப்டன் சிவா சவுகான் என்ற இந்திய பெண் இராணுவ அதிகாரி பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
அங்குள்ள காவல் நிலையில், அவர் 3 மாத காலத்துக்கு பணியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், தனது 11 வயதிலேயே தந்தையை இழந்துவிட்டார்.
இராணுவப் பணியில் தீவிர ஆர்வம் கொண்ட இவர், சென்னையில் உள்ள இராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில்; பயிற்சி பெற்றுள்ளார்.
சியாச்சின் சிகரத்தில் பணிபுரியும் முதல் பெண் இராணுவ அதிகாரி சிவா சவுகானுக்கு
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டுவிட்டரில் வாழ்த்து
தெரிவித்துள்ளார்.