நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
புதிய இணைப்பு
2023 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னெறியுள்ளது.
398 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் எதிர்த்து விளையாடிய நியுசிலாந்து 48.5 ஓவர்களில் 327 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இதன்மூலம் இந்தியா 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நியுசிலாந்து அணி சார்பில் டேரில் மிட்செல் 119 பந்துகளில் 134 ஓட்டங்களும் கேன் வில்லியம்சன் 73 பந்துகளில் 69 ஓட்டங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
2023 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரில் தற்போது இடம்பெற்றுவரும் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி 398 என்ற வெற்றி இலக்கை நியூசிலாந்து அணிக்கு நிர்ணயித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 397 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பில் விராட் கோலி 117 ஓட்டங்களையும், ச்ரயேஸ் ஐயர் 105 ஓட்டங்களையும், கில் 80 ஓட்டங்களையும் பெற்றனர்.
அதனை தொடர்ந்து இன்று சச்சினின் அதிக முறை ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்த சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
இதுவரை ஒரு நாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 49 முறை சதங்கள் அடித்துள்ளார்.
அதனை விராட் கோலி 50 சதங்கள் அடித்து முறியடித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண தொடரின் முதலாவது ஒருநாள் அரையிறுதிப் போட்டி மும்பையில் ஆரம்பமாகவுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (15) பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட்டம் செய்ய தீர்மானித்துள்ளது.
இந்தப் போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுக்கும் முக்கியமானது என்பதோடு இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணி
கான்வே, டி. மிட்செல், வில்லியம்சன், டொம் லதம், ரவீந்திர,பிலிப்ஸ், சாப்மேன், சான்ட்னர்,சவுத்தி, பெர்குசன், போல்ட்.

இந்திய அணி
ரோகித் ஷர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ச்ரயேஸ் ஐயர், கேஎல் ராகுல், சூரியகுமார் யாதவ், ஜடேஜா, மொகமட் ஷமி, குல்தீப் யாதவ், சிராஜ், பும்ரா.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri