இலங்கை கிரிக்கெட் மருத்துவர் தொடர்பில் தயாசிறியின் அதிர்ச்சியூட்டும் அறிக்கை
இலங்கை கிரிக்கெட்டின் மருத்துவக் குழுவில் உள்ள ஒரு குறிப்பிட்ட மருத்துவர் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் தேசிய அணி வீரர்களுக்கு வலி நிவாரணிகளை வழங்கியதாகவும், இதனால் வீரர்களுக்கு உபாதைகள் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கிரிக்கெட் அதிகாரிகள் விசாரணைக்கு
பொது நிறுவனங்களுக்கான, நாடாளுமன்ற கோப் குழுவின் முன், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஊசி மூலம் வீரர்கள் தொடர்ந்தும் உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளதாக ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

“வன் சொட்” என்று அழைக்கப்படும் இந்த மருத்துவர் ஒரு தொழில்முறை விளையாட்டு மருத்துவர் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
அசின், சிம்பு இணைந்து நடிக்கவிருந்த கைவிடப்பட்ட படம்.. இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா! First லுக் போஸ்டர் இதோ Cineulagam