வெள்ளத்தில் மூழ்கிய வீதியை புனரமைத்துத் தருமாறு கிராம மக்கள் கோரிக்கை
மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஹுனைஸ் நகர் கிராம மக்கள் மீள்குடியேறி சுமார் 13 வருடங்களாகியும் அவர்களின் அடிப்படை வசதிகள் பல இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருப்பதாக அக்கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடற் தொழிலை ஜீவனோபாயமாக கொண்டிருக்கும் இக்கிராம மக்களில் பெரும்பான்மையானோர் அண்மைக்காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கடற்கரை வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியதில் தொழிலுக்கு செல்ல முடியாது பாரிய அசெளகரியங்களை சந்தித்துள்ளனர்.
சுமார் 1.45 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கடற்கரை வீதியில் 100 மீட்டர் தூரம் மாத்திரமே செப்பனிடப்பட்டு உள்ளது எனவும் எஞ்சிய பகுதி குன்றும் குழியுமாக காணப்படுவதாலும் மழை காலங்களில் முற்றாக இந்த வீதியை பயன்படுத்த முடியாமல் வெள்ள நீர் வழிந்தோட முடியாதவாறு தேங்கி நிற்பதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
உரிய வடிகால் வசதி இன்மை
அத்துடன் நீண்டகாலமாக பழுதடைந்துள்ள தெரு விளக்குகள் பல இன்னமும் திருத்தப்படாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பல உள்ளக வீதிகள் இதுவரை அமைக்கப்படாமல் இருப்பதும் உரிய வடிகால் வசதிகள் செய்யப்படாமை காரணமாக பாடசாலை மாணவர்கள் உட்பட இக் கிராம மக்கள் மழை காலங்களில் உள்ளக வீதிகளை பயன்படுத்துவதில் சொல்லனா துயரங்களை அனுபவித்து வருவதோடு அரசியல் ரீதியாக இந்த ஊர் பழிவாங்கப் படுவதாகவும் குறித்த கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த தெருவிளக்குகளை பொறுத்தித்தருமாறும் உள்ளக வீதிகளை செப்பனிட்டுத் தருமாறும் சீரான வடிகான் வசதிகளையும் அமைத்துதருமாறு ஹுனைஸ் நகர் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைப் போல் கிரிக்கெட்டையும் கட்டியெழுப்ப முடியும் : ரணில் திட்டவட்டம்(Photos)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |