கிரேனில் மோதிய மோட்டார் சைக்கிள்: விபத்தில் ஒருவர் பலி
கொழும்பு, கிராண்ட்பாஸ் - வெல்ஸ்குமார மாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிள், கிரேனுடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அபிவிருத்திப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட கிரேனின் இரும்புக் கற்றையின் ஒரு பகுதி வாகனத்தின் வெளியே காணப்பட்டமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது கணவன் மற்றும் மனைவியும் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதுடன், விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் தகவல்
மேலும், உயிரிழந்தவர் எடரமுல்லை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் கிரேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam